பாவனியை காதலிப்பது strategy.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட அமீர்! பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு finale ஜெயிப்பதற்கான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது அதில் நேற்றைய டாஸ்கில் ராஜு மற்றும் பிரியங்கா வெளியேறினர். அதன் பிறகு அமீர், சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் மட்டுமே போட்டியில் இருக்கின்றனர்.
அவர்கள் மூன்று பேர் பங்கேற்கும் கடைசி டாஸ்க் இன்று நடந்திருக்கிறது. அதில் மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க வேண்டும், மற்ற போட்டியாளர்களா கருத்தோடு அவர்கள் ஒத்துபோனால் ஒரு கட்டம் தள்ளி நிற்கலாம்.
அந்த போட்டியில் சிபி மற்றும்சஞ்சீவ் ஆகியோர் சமநிலையில் இருக்கின்றனர். ஆனால் அமீர் மட்டும் கடைசியிலேயே நிற்கிறார்.
அப்போது பாவனி அமீர் தன்னை அபினை விஷயத்தில் influence செய்தாரா என கேட்கிறார். அது பற்றி பேச வேண்டாமே என ராஜு சொல்ல, அது என் விருப்பம் என சொல்லி தொடர்ந்து பேசுகிறார் பாவனி.
மேலும் அமீர் பாதியில் வந்து பவானியை லவ் செய்வதாக கூறுவது strategy என பிரியாங்க கூறுகிறார். அமீர் அதற்கு பச்சை விளக்கை காட்டி இருக்கிறார். அதனால் அவரே இது strategy என ஒப்புக்கொண்டிருக்கிறார்.