குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம்

By Yathrika May 21, 2022 01:20 PM GMT
Report

கோலிவுட் சினிமா ரசிகர்கள் என்று நாம் பெருமையாக கூறும் அளவிற்கு இதில் நிறைய ஹிட்டாக, நல்ல கதையுள்ள படங்கள் உள்ளன.

இப்போது நாம் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் தயாராகி மாஸ் கலெக்ஷன் பெற்ற படங்களின் தொகுப்பை தற்போது காண இருக்கிறோம்.

LKG (2019)

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஒரு அரசியல் சார்ந்த திரைப்படம். பிரபு எனபவர் ரூ. 3 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 15 கோடி வரை வசூலித்தது. சின்ன பட்ஜெட்டில் தயாராகி செம வசூல் வேட்டை நடத்திய ஒரு திரைப்படம்.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம் | Low Budget Good Movies In Tamil

இரும்புத் திரை (2018)

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படம். தொழில்நுட்பம் மூலம் சமூகத்தில் நடக்கும் பெரிய பிரச்சனையை குறித்து இப்படம் பேசும். ரூ. 14 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 60 கோடி வரை வசூல் செய்திருந்தது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம் | Low Budget Good Movies In Tamil

கோலமாவு கோகிலா (2018)

நயன்தாரா சோலோவாக கலக்கிய படம். அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் ஹிந்தியில் Good Luck Jerry என்ற பெயரில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி இருந்தது. ரூ. 8 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 73 கோடி வரை வசூலித்திருந்தது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம் | Low Budget Good Movies In Tamil

96 (2018)

ஒளிப்பதிவாளராக இருந்து 96 படம் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் பிரேம்குமார். த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் அமோக வெற்றியை பெற்றது. இப்படம் இதுவரை 30 விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது. ரூ. 18 கோடியில் தயாரான படம் ரூ. 55 கோடி வரை வசூலித்தது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம் | Low Budget Good Movies In Tamil

ராட்சசன் (2018)

விஷ்ணு விஷாலுக்கு அவரது சினிமா பயணத்தில் பெரிய திருப்புமுணையாக அமைந்த திரைப்படம். ரூ. 5ல் இருந்து ரூ. 8 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் படு ஹிட்டடிக்க ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகி செம ஹிட்டடித்தது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம் | Low Budget Good Movies In Tamil

டிமான்ட்டி காலனி (2015)

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நிஜ சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் அருள்நிதி, ரமேஷ் திலக் மற்றும் சனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல கதைக்களத்தை கொண்டு வெளியானதால் ரூ. 65 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் செய்த சிறந்த படங்கள் என்னென்ன- முழு விவரம் | Low Budget Good Movies In Tamil

இப்படங்களை தாண்டி குறைவான பட்ஜெட்டில் தயாராகி அதிகம் வசூலித்த படங்களின் சின்ன லிஸ்ட்

  • காக்கா முட்டை- பட்ஜெட் ரூ. 1 கோடி, வசூல்- ரூ. 12 கோடி
  • மாநகரம்- பட்ஜெட் ரூ. 3 கோடி, வசூல்- ரூ. 12 கோடி
  • பேரன்பு- பட்ஜெட் ரூ. 4 கோடி, வசூல்- ரூ. 35 கோடி 

பாக்கியலட்சுமியில் ராதிகாவிற்கு தெரியவரும் கோபி பற்றிய உண்மை- யார் சொன்னது தெரியுமா, பரபரப்பான புரொமோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US