பொன்னியின் செல்வன் படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற நடிகர்கள் யார் யார்?
பொன்னியின் செல்வன்
பிரபல எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய கதைகளில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது பொன்னியின் செல்வன்.
ஒரு இளவரசரின் கதையில் நிறைய கதாபாத்திரங்கள் வைத்து அதிரடி டுவிஸ்ட் என சுவாரஸ்யமாக கதையை எழுதியிருப்பார்.
இந்த நாவலை படமாக எடுக்க எத்தனையோ இயக்குனர்கள் முயற்சிக்க கடைசியில் மணிரத்னம் படமாக எடுத்து சாதனை செய்துள்ளார்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

சம்பள விவரம்
படம் ரிலீஸ் ஆக ஒரு வாரமே உள்ள நிலையில் படக்குழுவும் புரொமோஷனை படு சூடாக செய்து வருகிறார்கள். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா என பலரும் புரொமோஷனில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
தற்போது இந்த பொன்னியின் செல்வன் படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற நடிகர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
யார் யார் என்ற விவரம் இதோ,
- நடிகர் பிரபு – ரூ 1.5 கோடி
- பிரகாஷ் ராஜ் – ரூ 1.5 கோடி
- ஐஸ்வர்யா லட்சுமி – ரூ 1.5 கோடி
- ஜெயராம் – ரூ 1 கோடி
- சோபிதா துலிபாலா – ரூ 1 கோடி
ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமே இதுவா?- செம பிளான் பா