10 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லப்பர் பந்து
கடந்த 20ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார்.

முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

10 நாட்கள் வசூல் விவரம்
கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதிலிருந்து அரசியல் குறித்து பேசிய இப்படத்தை மக்கள் கொண்டாடி வரும் இந்த நிலையில், உலகளவில் லப்பர் பந்து திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்து உலகளவில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri