லப்பர் பந்து படத்தின் 17 நாட்கள் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை கோடியா

Kathick
in திரைப்படம்Report this article
லப்பர் பந்து
சமீபத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார். முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி சவாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, காளி வெங்கட் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கிரிக்கெட் கதைக்களத்தில் உருவானா இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் நாளில் இருந்த வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படம் 17 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.
வசூல்
அதன்படி, 17 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் உலகளவில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் வெளிவந்தபின் மற்ற திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ள நிலையிலும், லப்பர் பந்து படத்தின் வசூல் குறையவில்லை என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.