லப்பர் பந்து கதையை ஹிந்தியில் ரீமேக் செய்யும் டாப் ஹீரோ.. ஹீரோயின் இவரா
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்து இருந்த படம் லப்பர் பந்து. இந்த படத்தில் தினேஷ் ஜோடியாக ஸ்வாசிகா நடித்து இருந்தார். அவரது ரோலுக்கு பெரிய முக்கியத்துவம் கதையில் இருந்தது.
அந்த படம் மூலமாக பெரிய புகழை பெற்று இருக்கும் ஸ்வாசிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சூர்யா - RJ பாலாஜி கூட்டணியில் உருவாகும் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
லப்பர் பந்து ஹிந்தி ரீமேக்
இந்நிலையில் லப்பர் பந்து படத்தை பார்த்து வியந்த நடிகர் ஷாருக் கான் அந்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்து இருக்கிறாராம்.
அவருக்கு ஜோடியாக லப்பர் பந்தில் நடித்த ஸ்வாசிகா தான் நடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறாராம். அந்த தகவலை ஸ்வாசிகா தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan
