லப்பர் பந்து 16 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
லப்பர் பந்து
கடந்த சில வாரங்களில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை, கிரிக்கெட் கதைக்களம் என அனைவரையும் கவர்ந்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் கதாநாயகிகளாக சுவாசிகா மற்றும் சஞ்சனா நடிக்க பால சரவணன், காளி வெங்கட், டிஎஸ்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 16 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றிவிழாவும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள்.
இந்த நிலையில், 16 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
