லப்பர் பந்து 8 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
லப்பர் பந்து
கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார்.
மேலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், ஜென்சன், டிஎஸ்கே என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தை வெற்றியடைய செய்துள்ளனர்.
வசூல்
முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு சிறந்த விமர்சனம் கிடைத்து வந்த நிலையில், 8 நாட்களை கடந்தும் பாக்ஸ் ஆபிஸில் லப்பர் பந்து திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் 8 நாட்களில் உலகளவில் லப்பர் பந்து திரைப்படம் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
