எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
லூசிஃபர் 2: எம்புரான்
மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளிவந்துள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான்.

2019ம் ஆண்டு வெளிவந்த லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், இப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லூசிஃபர் 2: எம்புரான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் முதல் நாள் இவ்வளவு பெரிய வசூல் செய்ததே இல்லை.

இதன்மூலம் மாபெரும் வசூல் சாதனையை எம்புரான் திரைப்படம் படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri