5 நாட்களில் எம்புரான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லூசிஃபர் 2 எம்புரான்
மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் லூசிஃபர் 2 எம்புரான்.
2019ம் ஆண்டு வெளிவந்த லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான இந்த எம்புரான் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. கடந்த வாரம் 27ம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேலும் சில காரணங்களால் தற்போது இப்படத்திலிருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் உலா வருகிறது.
கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு இருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.
வசூல்
இந்த நிலையில், 5 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் எம்புரான் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.