துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் 10 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
லக்கி பாஸ்கர்
தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படங்களில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படங்கள் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர். இதில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று பான் இந்தியன் ஸ்டாராக இருக்கும் துல்கர் சல்மான் தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணனும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க மீனாட்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார்.
வசூல்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லக்கி பாஸ்கர் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.