லக்கி பாஸ்கர் இயக்குனர் கொடுத்த பேட்டி.. தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம்
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.115 கோடிக்கும் மேல் வசூலித்து பெரிய லாபத்தை ஈட்டியது.
லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். சூர்யா 46 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
லக்கி பாஸ்கர் 2
இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி அளித்த பேட்டியில் தான் லக்கி பாஸ்கர் படத்தின் 2ம் பாகத்திற்காக தற்போது பணியாற்றி வருவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் குஷி ஆகி இருக்கின்றனர்.
மேலும் அவரது மற்றொரு படமான வாத்தி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என பரவிய செய்தி வதந்தி மட்டுமே என கூறி இருக்கிறார்.
தனுஷ் நடித்த வாத்தி படம் Sir என்ற பெயரில் தெலுங்கில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
