லக்கி பாஸ்கர் 8 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
லக்கி பாஸ்கர்
கடந்த வாரம் தீபாவளிக்கு அமரன், லக்கி பாஸ்கர், பிளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் மாபெரும் வெற்றிபெற்று வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர்.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடித்திருந்த படம் லக்கி பாஸ்கர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
இந்த நிலையில் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, லக்கி பாஸ்கர் திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் ரூ. 100 கோடி வசூல் சாதனையை இப்படம் பண்ணுமா என்று.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
