13 நாட்களில் லக்கி பாஸ்கர் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை.. இத்தனை கோடியா
துல்கர் சல்மான்
இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் துல்கர் சல்மான்.
என்னாதன் மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகி படங்கள் நடித்து வந்தாலும், இன்று தமிழ், தெலுங்கு என மற்ற மொழி திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் சென்சேஷனல் ஹிட் கொடுத்தார்.
லக்கி பாஸ்கர் வசூல்
தெலுங்கில் சீதா ராமம் திரைப்படம் சூப்பர்ஹிட்டானதை தொடர்ந்து தற்போது லக்கி பாஸ்கர் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
ஆம், தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, குழந்தை நட்சத்திரம் ரித்விக், ராம்கி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.