வசூலை வாரிக்குவிக்கும் லக்கி பாஸ்கர்.. மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
லக்கி பாஸ்கர்
மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
பிரபல மூத்த நடிகர் மம்மூட்டியின் மகனான இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓகே கண்மணி, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்தார்.
இவருடைய நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த படம் தான் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.