கேம் சேஞ்சர் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. லைகா கொடுத்த புகார் தான் காரணம்
இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் இயக்குவதற்கு பெயர்பெற்றவர். அவர் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம் படுதோல்வி அடைந்தது.
அதை தொடர்ந்து இந்தியன் 3ம் பாகமும் வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் நிச்சயம் தியேட்டர்களில் தான் வரும் என ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.
கேம் சேஞ்சருக்கு சிக்கல்!
இந்நிலையில் கேம் சேஞ்சர் படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு லைகா நிறுவனம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இந்தியன் 3 படத்தை முடித்து கொடுக்காமல் கேம் சேஞ்சர் படம் தமிழ்நாட்டில் வெளியாக கூடாது என திரைத்துறை கூட்டமைப்பில் புகார் அளித்து இருக்கிறது லைகா.
இதன் காரணமாக இன்னும் கேம் சேஞ்சர் படத்தின் திரையரங்க ஒப்பந்தம் இன்னும் தமிழ்நாட்டில் தொடங்காமல் இருக்கிறது.
ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.