விஷாலுக்கு எதிரான வழக்கில் லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்.. எத்தனை லட்சம் தெரியுமா
நடிகர் விஷாலுக்கு எதிரான கடன் தொகை வழக்கில் லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் வழக்கு செலவாக அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த ரூ.5 லட்சம் அபராத தொகையை, மாணவ மாணவிகள் கல்வி செலவுக்கு வழங்க போவதாக நடிகர் விஷால் அறிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, " தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன்.
தற்போது கோர்ட்டு அபராதம் விதித்துள்ள ரூ.5 லட்சம் தொகை தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு செலவு செய்யப்படும் " என கூறியுள்ளார்.
விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் கூட இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu