ரஜினியின் வேட்டையன் வசூல் வேட்டையில் தாறுமாறு... அதிகாரப்பூர்வ கலெக்ஷன் விவரம்
வேட்டையன்
கடந்த அக்டோபர் 10ம் தேதி தமிழ்நாடே திருவிழா கோலமாக இருந்தது.
காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஜெய் பீம் பட புகழ் ஞானவேல் இயக்க ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரிக்க இந்த பிரம்மாண்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
முழு வசூல்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் மொத்தமாக இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
தலைவர் ரஜினியின் வேட்டையன் இதுவரை மொத்தமாக ரூ. 240 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.