தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ
சினேகன்
தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற பாடல் எழுதி பாடலாசிரியராக களமிறங்கியவர் சினேகன்.
பின்னர் பாண்டவர் பூமியில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்களை எழுத செம ஹிட்டடித்தது.
மௌனம் பேசியதே படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம், சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிகிட்டு, ஆட்டோகிராப் படத்தில் ஞாபகம் வருதே, ராம் படத்தில் ஆராரிராரோ, ஆடுகளம் படத்தில் யாத்தே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த ஹிட் பாடல்களை எல்லாம் இவர்தான் எழுதினார் என்பது சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தான் அனைவருக்கும் அதிகம் தெரியும் என்றே கூறலாம்.
குழந்தைகள்
கடந்த 2021ம் ஆண்டு சினேகன் தனது நீண்டநாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்க கடந்த ஜனவரி 25ம் தேதி சினேகன்-கன்னிகா ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள்.
தனது மகள்களை கையில் வாங்கிய தருணத்தை அழகிய வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் சினேகன், இதோ வீடியோ,