பாடலாசிரியர் தாமரையின் மகனை பார்த்துள்ளீர்களா?... இவ்வளவு பெரியவராக வளர்ந்துட்டாரே
தாமரை
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக மவுசு உள்ளது, அவர்களின் சம்பளம் மட்டுமே உயர்கிறது.
ஹீரோக்களை மையப்படுத்திய கதைகள் தான் அதிகம் வருகிறது என்ற பேச்சு இருந்தது, ஆனால் அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்று தான் கூற வேண்டும்.
அப்படி சினிமாவில் எல்லா துறையிலும் பெண்கள் சாதிக்க பாடலாசிரியர் பகுதியிலும் பெண்கள் இடம் பிடித்துவிட்டார்கள்.
அப்படி ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு பெண் பாடலாசிரியரில் ஒருவர் தான் தாமரை. இவர் எழுதும் பாடல்களில் ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தார், அதாவது தூய தமிழில் தான் பாடல்கள் எழுதுவேன், இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன் என்று இருந்தார்.
தாமரை மகன்
இவர் தமிழில் மட்டும் தான் எழுதுவேன், இரட்டை வார்த்தை கிடையாது என்று கட்டுப்பாடு வைத்ததாலோ என்னவோ அதிகம் இப்போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
சினிமாவை தாண்டி சொந்த வாழ்க்கையில் இவர் பிரச்சனை சந்தித்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இவருக்கும் இவரது கணவர் தியாகுவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனை நடந்தது.
தற்போது என்னவென்றால் தாமரையின் மகன் சமரன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. விஜய் டிவியில் நாய்கள் பற்றி விவாதிக்கப்பட்ட நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.