சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நேரத்தில் மனைவி எடுத்த முடிவு... மாகாபா ஆனந்த் பகிர்ந்த விஷயம்
மாகாபா ஆனந்த்
சந்தோஷமான வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சிரிப்பு என்பதை மறந்து வாழ்கிறார்கள்.
அப்படி சிரிக்க கூட நேரம் இல்லாமல் ஓடும் மக்களுக்காகவே தொலைக்காட்சிகளில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் வந்துள்ளன. ஷோக்களை தாண்டி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லோரையும் சிரிக்க வைப்பவர் தான் மாகாபா ஆனந்த்.
இவரை நினைத்தாலே அவர் பல நிகழ்ச்சிகளில் செய்த காமெடிகள் தான் நியாபகம் வரும்.

கஷ்டம்
இவருக்கு சமீபத்தில் ஒரு விருது விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது கிடைத்தது.
அப்போது மேடையில் அவர் தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட காலங்களை குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், துபாயில் ரேடியோ ஜாக்கியாக வேலை செய்தேன், என்னோட வேலை நேரம் இரவு 9 முதல் 11 ஒரு ஷோ, 3 முதல் 6 ஒரு ஷோ செய்வேன், பகலில் தூங்குவேன்.

என்னோட மனைவி Visit Visaவில் துபாய் வந்து என் நிலைமை பார்த்துவிட்டு இந்த மாதிரி வாழ்க்கை உனக்கு வேண்டாம்.
ஊரில் உள்ளவர்கள் துபாய்ல இருக்காரு, சொகுசான வாழ்க்கைனு நினைப்பாங்க, இங்க கஷ்டப்படுறது யாருக்கு தெரியும்.
வேலையை விடச்சொல்லி என்னை கூட்டிட்டு வந்துட்டா. அது தான் என்னோட வாழ்க்கையில் முதல் Turning Point, அதன்பின் வாழ்க்கை மாறியது. இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு என் மனைவி சூசன் தான் காரணம் என்றார்.