குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன் கிடையாதா?- இவர்தானா, அட செம சூப்பரு
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்து மக்கள் எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது, வேறு என்ன நிகழ்ச்சி நாம் எல்லாம் ரசித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
3வது சீசனிற்கான புரொமோ எல்லாம் வந்துவிட்டது, போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரமும் கசிந்து வருகிறது.
இதுவரை நடந்த 2 சீசனிலும் ரக்ஷன் தான் தொகுப்பாளராக இருந்தார், ஆனால் 3வது சீசனிற்கு அவர் இல்லை என கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக மாகாபா ஆனந்த் தான் இந்த குக் வித் கோமாளி 3வது சீசனை தொகுத்து வழங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவுகிறது.
அவர் வந்தால் நிகழ்ச்சி இன்னும் செம கலாட்டாவாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.