2 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மாமன்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி, இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி.
விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகி, பின் கருடன், விடுதலை 2, கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் சூரி நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளிவந்த திரைப்படம் மாமன்.

இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
எமோஷனல் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூலில் நல்ல பிக்கப் ஆகியுள்ளது.

இந்த நிலையில் 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மாமன் திரைப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri