சூரியின் மாமன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. நான்கு நாட்களில் செய்துள்ள வசூல்
மாமன்
தமிழ் சினிமாவில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என நடிகர் சூரி தொடர்ந்து தனது நடிப்பில் மிரட்டி வருகிறார்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன். இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் நான்கு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இந்த நிலையில், நான்கு நாட்களில் உலகளவில் மாமன் திரைப்படம் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.