மாபெரும் வெற்றியடைந்துள்ள மாமன் படத்தின் இறுதி வசூல் இதுதான்.. இதோ பாருங்க
மாமன்
சூரி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த மாமன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி கடந்த மே 16ம் தேதி திரைக்கு வந்த படம் மாமன். இப்படத்தை Lark Studios நிறுவனம் தயாரித்திருந்தது.

ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இறுதி வசூல் விவரம்
மாமன் - மருமகன் இடையிலான பாசப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மாமன் படம் இதுவரை மொத்தமாக ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது. விடுதலை, கருடன் ஆகிய படங்களை தொடர்ந்து சூரிக்கு மற்றொரு வெற்றி திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri