பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
மாமன்னன்
உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் நேற்று வெளிவந்தது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பல வசூல் சாதனைகளை இப்படம் படைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகையின் நிஜ கணவர் யார்?- அவரும் ஒரு பிரபலமா?
You May Like This Video