மாமன்னன் படம் எப்படி இருக்கு.. நடிகர் தனுஷ் வெளியிட்ட முதல் விமர்சனம்
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை வெளிவரவிருக்கும் மாமன்னன் படத்தை தனுஷ் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
முதல் விமர்சனம்
இதில், "மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜின் எமோஷன். வடிவேலு சார் மற்றும் உதயநிதி, கீர்த்தி மற்றும் பகத் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் சாரின் இசை அழகாக இருந்தது. கண்டிப்பாக படத்தின் இடைவேளை காட்சியில் திரையரங்கம் அதிரும்" என கூறியுள்ளார்.
மாமன்னன் படம் குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள இந்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகருடன் நெருக்கமான முத்த காட்சியில் நடித்து, டெட்டால் ஊற்றி வாய்யை கழுவினேன்.. 64 வயது நடிகையின் பேட்டி

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
