மாநாடு செய்த சாதனை: கடவுள் இருக்கிறார் என உருகிய வெங்கட் பிரபு
சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்து இருந்த மாநாடு படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆனது. டைம் லூப் என்ற புது கான்செப்டை இயக்குனர் வெங்கட் பிரபு இங்கே அறிமுகப்படுத்தி இருந்தார்.
படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலும் குவித்தது. இந்நிலையில் தற்போது மாநாடு 100 நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்து இருக்கிறது. சென்னை ரோகிணி தியேட்டரில் தான் தினம் ஒரு ஷோ மட்டும் மாநாடு போடப்பட்டு வருகிறது.
இதற்காக நன்றி கூறி வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"கோடானகோடி நன்றிகள் சிலம்பரசன் ரசிகர்களுக்கு, சினிமா ரசிகர்களுக்கு, மீடியா நண்பர்களுக்கு, இதை சாத்தியம் ஆக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. கடவுள் இருக்கிறார்" என வெங்கட் பிரபு ட்விட் செய்து உள்ளார்.
சிம்பு ரசிகர்கள் தற்போது இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.
???????? kodanakodi nandrigal to #SilambarasanTR fans!! Cinema lovers!! Print and online media friends!! And to every single person who made this possible!! #Kadavulirrukaar #maanaadu100days #maanaadu pic.twitter.com/IJWRdIA9Uh
— venkat prabhu (@vp_offl) March 3, 2022