மாநாடு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தகவல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்த்ரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நாளை வெளியாகவிருந்த மாநாடு திரைப்படம் தள்ளிப்போகவுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில் " நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்