ரிலீசிற்கு முன்பு சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் surprise...தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் படம் தான் மாநாடு.
நடிகர் சிம்புவுடன் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்,SJ சூர்யா, SA சந்திரசேகர் என கலக்கலான காம்போவில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்து வழங்குகிறார்.
ஏற்கனவே படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
படம் வருகிற 25-ந் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்பே சிம்பு ரசிகர்களுக்கு surprise தரும் வகையில் வருகிற 18-ந் தேதி படத்தை pre release செய்ய போவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
இது சிம்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.