சிம்புவின் பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் சமந்தாவின் முன்னாள் கணவர் ! வெளியான புதிய அப்டேட்..
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வருடம் இறுதியில் வெளியான திரைப்படம் மாநாடு.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான மாநாடு திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியே மற்ற மொழிகளின் ரீமேக் உரிமையையும் கைப்பற்றியிருந்தார்.
இதனிடையே இப்படத்தின் ரீமேக் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக்காகவுள்ள மாநாடு படத்தில் நாக சைதன்யா மற்றும் பூஜா ஹெக்டேவும் நடிக்கவுள்ளார்களாம்.
மேலும் SJ சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.