பெரிய வரவேற்பை பெற்றுள்ள மாநாடு SJ சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவேண்டியது யார் தெரியுமா?
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று மாஸ்ஸாக வெளியான திரைப்படம் தான் மாநாடு.
இப்படம் நேற்று திரைக்கு வருவதற்குள் பல தடைகளை கடந்து தான் வந்தது, மேலும் இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சனங்களையே பெற்று வருகிறது.
பல வருடங்கள் கழித்து சிம்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் SJ சூர்யாவின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதில் வேறொரு நடிகர் தான் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆம், நடிகர் அரவிந்த் ஸ்வாமி தான் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். ஆனால் இப்படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
இதனால் அரவிந்த் சாமி இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.