மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாநாடு.
இப்படம் வெளியாகும் கடைசி நிமிடம் வரை பல தடைகளை சந்தித்தது என்றே கூறலாம்.
மேலும் இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை வெளியான சிம்புவின் திரைப்படங்களில் மாநாடு திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை புதிதாக படைத்துள்ளது.
இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாமல் இருந்தது, அதுவே இப்படம் வெளியாக பெரிய தடையாக மாறியது.
இதனிடையே மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை கண்டு விஜய் டிவி தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.