மாநாடு 3 நாள் வசூல் விவரம்! லாபத்தை எட்டியதா? இல்லையா?
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாநாடு.
இப்படம் வெளியாகும் கடைசி நிமிடம் வரை பல தடைகளை சந்தித்தது என்றே கூறலாம்.
மேலும் இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை வெளியான சிம்புவின் திரைப்படங்களில் மாநாடு திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை புதிதாக படைத்துள்ளது.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மாநாடு தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ரூ 21 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாநாடு திரைப்படம் லாபத்தை எட்டிவிடும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய் IBC Tamilnadu