மாநாடு வெளியான மூன்றே நாட்களில் இதை செய்துள்ளது - இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு..
சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் மாநாடு.
இப்படம் வெளியாகும் கடைசி நிமிடம் வரை பல தடைகளை சந்தித்தது என்றே கூறலாம்.
மேலும் இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை வெளியான சிம்புவின் திரைப்படங்களில் மாநாடு திரைப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை புதிதாக படைத்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அவரின் ட்விட்டர் பக்கத்தில் "நான்கே நாட்களில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் ஈட்டி கொடுத்துள்ளது மாநாடு படம்.
கேரளா மற்றும் கர்நாடகாவில் மூன்றே நாட்களில் லாபம் ஈட்டியுள்ளது" என வெங்கட் பிரபு பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.