தனுஷ் மேனேஜர் சர்ச்சை.. சீரியல் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்
பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் சில தினங்களுக்கு முன்பு சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகைகள் சந்திக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசி இருந்தார்.
தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரில் தன்னை படவாய்ப்பு கொடுப்பதாக ஒருவர் தொடர்பு கொண்டார் என்றும், அதற்கு கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) இருக்கும் என அவர் சொன்னார். அதன் பின் மற்றொரு நம்பரில் இருந்து அந்த நபர் தொடர்பு கொண்டார் என மான்யா ஆனந்த் கூறி இருந்தார். பேட்டியில் அந்த பகுதி மட்டும் வைரல் ஆகி சர்சையாக வெடித்திருக்கிறது.

சர்ச்சைக்கு விளக்கம்
தனுஷின் மேனேஜர் பெயரை கூறி மான்யா ஆனந்த் கூறியது தற்போது சர்ச்சையாக மாறி இருக்கிறது. அது பற்றி மான்யா ஆனந்த் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"சினி உலகத்திற்க்கு அளித்த அந்த பேட்டியை முழுமையாக பாருங்க. ஸ்ரேயாஸ் பெயரை பயன்படுத்தி பொய்யான ஒரு நபர் அப்படி செய்து இருக்கலாம் என கூறி இருக்கிறேன். அந்த போன் நம்பரை தனுஷ் சார் டீமுக்கு அனுப்பி அது யார் என விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறினேன்."
"இதை பற்றி பொய்யான செய்தியை பரப்பாதீர்கள்" என மான்யா ஆனந்த் கூறி இருக்கிறார்.