அது பொய்.. தனுஷ் பெயரை கெடுக்குறாங்க! - மான்யா ஆனந்த் வீடியோ
தற்போது ஒரு வீடியோ வைரல் ஆக போய்க்கொண்டிருக்கிறது. நான் தனுஷ் மீது குற்றம் சாட்டி இருக்கிறேன் என. சினிஉலகத்திற்கு நான் அளித்த பேட்டியில் சொன்னது இதுதான்.
அந்த நபர் போலியா, ஒரிஜினலா என எனக்கு தெரியவில்லை. ஸ்ரேயாஸ் பெயரை பயன்படுத்தி ஒருவர் கால் செய்திருக்கிறார்.
இது பற்றி மற்றவர்களிடம் கேட்டதற்கு "இது பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்காது" என சொன்னார்கள். அதையும் அந்த பேட்டியில் தெளிவாக கூறி இருக்கிறேன். "தனுஷ் பெயர் தவறாக பயன்படுதப்பட்டு இருக்கிறது" என்று தான் அவர்களும் (சினிஉலகம்) வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

அது விழிப்புணர்வுக்கான வீடியோ. அந்த வீடியோவை கட் செய்து நான் குற்றம்சாட்டியது போல சிலர் மாற்றி வைத்திருக்கிறார்கள்.சில youtube சேனல்கள் viewsகாக இப்படி செய்கிறார்கள்.
என் வீடியோவை பயன்படுத்தி வேறு ஒருவரை defame செய்கிறார்கள். தனுஷ் மீது நான் குற்றம் சாட்டியதாக சொல்வது பொய்யான செய்தி. அப்படி ஒன்று நடந்ததே இல்லை.
என்னால் மற்றவர்கள் பெயர் கெட கூடாது என்பதால் தான் இந்த வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுக்கிறேன். அது பொய் செய்தி என இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். இவ்வாறு மான்யா கூறி இருக்கிறார்.