மூன்று நாட்களில் மாரீசன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மாரீசன்
மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டு இருக்கிறார் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் மாரீசன்.
மாமன்னன் படத்திற்கு பின் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருடைய கூட்டணி இப்படத்திலும் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது.
ஒரு பக்கம் கலவையான விமர்சனம் இப்படத்தின் மீதி வைக்கப்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சுதீஷ் ஷங்கர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
வசூல் விவரம்
இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் மாரீசன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பகத் பாசில் - வடிவேலு கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள மாரீசன் படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

முதலமைச்சருக்கே அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்ல; அதனால்தான் அப்போலோ - தமிழிசை தாக்கு! IBC Tamilnadu
