மாரீசன் திரை விமர்சனம்
மாமன்னன் என்ற மெகா ஹிட் பிறகு பகத் பாசில், வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்க, சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள மாரீசன் மாமன்னன் வெற்றியை பெற்றதா? பார்ப்போம்.
கதைக்களம்
பகத் பாசில் பாளையங்கோட்டை ஜெய்லில் இருந்து ரிலிஸாகி உடனே அடுத்த என்ன மீண்டும் திருட ஆரம்பிக்கிறார், அப்படி ஒரு வீட்டில் திருட இறங்கும் போது வடிவேலு சங்கிலியில் அவருடைய மகன் கட்டி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் வந்த பகத்திடம் திருடன் என தெரிந்தும் என்னை இங்கிருந்து காப்பாற்று நான் உனக்கு ATM-ல் பணம் எடுத்து தெரிகிறேன் என கூறுகிறார், வடிவேலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் மறக்கும் வியாதி உள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பகத் வடிவேலு அக்கவுண்ட்-ல் இருக்கும் 25 லட்சத்தை திருட அவருடனே பயனப்படுகிறார், வடிவேலு சில நண்பர்களை பார்க்க வேண்டும் என சொல்ல, அங்கெல்லாம் அழைத்து செல்கிறார் பகத்.
ஆனால், அங்கு தான் டுவிஸ்ட் வடிவேலு யாரையெல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கிறாரோ அவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட, வடிவேலு யார் உண்மையாகவே இவருக்கு நியாபக மறதி எல்லாம் இருக்கா என்பதன் மர்ம முடிச்சுகளே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு எலி கொல்ல வருபவரிடம் இருந்து தப்பித்து பாம்பிடம் மாட்டிக்கொள்கிறது, இதை காட்சியாக காட்டி தான் படத்தை ஆரம்பிக்க, அதுவே தான் படத்தின் கதையாக இருக்கிறது.
பகத் இந்த மாதிரி ரோல் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் போல அவருக்கு, மிக கேஷ்வல் ஆக அவர் செய்யும் திருட்டு வேலை உண்மையாகவே இவர் நடிக்கிறார, இல்லை அப்டியே இருக்கிறாரே என கேட்க தோன்றுகிறது.
வடிவேலு மாமன்னன் தொடர்ந்து செம எமோஷ்னல் கதாபாத்திரம், ஆரம்பத்தில் தனக்கு ஏதோ மறதி போல் அவர் செய்யும் செய்கைகள், பிறகு அவரின் ட்ரான்பர்மேஷன் என வடிவேலு தன் பங்கிற்கு நடிப்பில் பகத்ற்கு சவால் விட்டுள்ளார்.
படத்தின் முதல் பாதி ஆஹா சூப்பர் ட்ராவல் பீல் குட் படத்திற்கு தான் வந்துள்ளோம் என நினைக்க வைத்து, இடைவேளையில் வரும் டுவிஸ்ட் கதைக்களத்தையே மாற்றுகிறது.
வடிவேலு எதற்காக இதெல்லாம் செய்கிறார் என்று அதை கனேக்ட் செய்த விதம் எல்லாம் அருமை, ஆனால், அதே நேரத்தில் அடுத்தடுத்த காட்சிகள் இரண்டாம் பாதியில் நமக்கே தெரிந்து விடுவது என்பது கொஞ்சம் பிரச்சனையாக உள்ளது.
அதிலும் பகத்-ற்கு வடிவேலு யார் என்ற உண்மையை தெரிந்துக்கொள்ள அவர் செல்லும் இடமெல்லாம் பெரிய பதட்டத்தை உருவாக்கவில்லை, அந்த இடங்கள் எல்லாம் இன்னமும் சுவாரஸ்யம் கூடியிருக்கலாம், ஏனெனில் அதற்கான களம் அங்கு இருந்தது.
வடிவேலு என்றாலே காமெடி தானே, ஆனால், இதில் காமெடியே இல்லை என்றாலும் தன் மகன் என நினைத்து சிகரெட் பிடிக்கும் பகத்தை கண்ணத்தில் அறைவது, அடுத்தக்காட்சியே பகத் வடிவேலுவிடம் நான் யார்னு சொல்லுங்க என கேட்டு சிகரெட் புடிக்கும் காட்சிகள் எல்லாம் செம கலகலப்பு.
இப்படியான பீல் குட் படமாக இருக்கும் என்று வந்தவர்களுக்கு இரண்டாம் பாதி கொஞ்சம் ஷாக் ஆக தான் இருக்கும்.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அப்படியே நாமே திருவண்ணாமலை பயனப்பட்ட அனுபவம், யுவன் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை, அதிலும் இளையராஜா பாடல் ஒன்று பயன்படுத்திய இடம் செம ட்ரீட் ரசிகர்களுக்கு.
க்ளாப்ஸ்
பகத், வடிவேலு அசுர நடிப்பு.
யுவனின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
படத்தின் வசனங்கள்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இன்னமும் கூட விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கலாம், அத்தகைய களமும் இருந்தது.