விஜய் ஆண்டனியின் மார்கன் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
மார்கன்
பொதுவாக திரில்லர் கதைக்களத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த க்ரைம் திரில்லர் படம்தான் மார்கன்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல்
கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படம் இதுவரை 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில் 8 நாட்களில் உலகளவில் மார்கன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் 8 நாட்களில் இப்படம் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா IBC Tamilnadu
