மாரி செல்வராஜ் யூனிவெர்ஸ்.. மாமன்னன் படத்தில் இப்படியொரு ட்விஸ்ட் வைத்துள்ளாரா
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படம் ஜூன் 2023ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து வடிவேலுவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது கையில் லால் புகைப்படத்தை பச்சை குத்தியுள்ளார்.
யூனிவெர்ஸ்
இதை கவனித்த ரசிகர்கள் ஒரு வேலை கர்ணன் படத்தில் வரும் லால் புகைப்படத்தை தான் வடிவேலு மாமன்னன் படத்தில் பச்சை குத்தியுள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போதைய திரையுலக ட்ரெண்ட் யூனிவெர்ஸ் கிரியேட் செய்வது தான். விக்ரம் படத்தில் கூட அதை தான் நாம் பார்த்தோம். அதே போல் மாரி செல்வராஜ் தனக்கான யூனிவெர்சை உருவாக்கியுள்ளாரோ என ரசிகர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.
தனது இரண்டாவது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை கயல் ஆனந்தி- புகைப்படங்கள் இதோ