லாபத்தை கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்த மாவீரன்.. எத்தனை கோடி தெரியுமா
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கி வெற்றியை ருசித்த இயக்குனர் மடோன் அஸ்வின் தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத வெற்றியை தேடி கொடுத்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் நடித்திருந்தார். மேலும் சிவாவின் அம்மாவாக நடித்த சரிதா, வில்லனாக வரும் மிஸ்கின் என அனைவரையும் இப்படத்தில் பட்டையை கிளப்பிவிட்டனர்.
படத்தின் லாபம்
மாவீரன் ரூ. 35 கோடி பட்ஜட்டில் உருவான திரைப்படம் ஆகும். இதுவரை உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ. 40 கோடி ஷேர் கிடைத்துள்ளது.
படம் வெளிவருவதற்கு முன் பிஸ்னஸ் செய்யப்பட்ட நிலையில் இப்படத்திற்கு ரூ. 83 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது, கிட்டத்தட்ட ரூ. 85 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri