11 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதகஜராஜா
விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் 13 ஆண்டுகளுக்கு முன் உருவான திரைப்படம் மதகஜராஜா.

இப்படம் பல பிரச்சனைகளுக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்தாலும், திரையரங்கில் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. 2024ஆம் ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாகவும் தமிழ் சினிமாவிற்கு அமைந்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், 11 நாட்களை கடந்துள்ள மதகஜராஜா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 47.8 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளருக்கு மாபெரும் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri