4 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதகஜராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடந்த 2023ல் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 2024ல் வெளியான ரத்னம் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால், 2025ஆம் ஆண்டு விஷாலின் மாபெரும் வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஆம், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் மதகஜராஜா. 13 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக விஷால் - சந்தானம் இருவருடைய நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் கவர்ந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது மதகஜராஜா.
வசூல்
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கப்போடு போட்டு வரும் இப்படம் உலகளவில் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 50 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video