11 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சுந்தர் சி
தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் இயக்கி நடித்து சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2024ஆம் ஆண்டில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்தது.
அரண்மனை 4 திரைப்படத்தை தொடர்ந்து கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மத கஜ ராஜா
பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்து உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் விஷால் உடன் நடித்திருந்தனர்.
சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில், 11 ஆண்டுகள் கழித்து இப்படத்தை வெளியிட்ட முடிவு செய்துள்ளார்களாம். வருகிற ஆகஸ்ட் மாதம் மத கஜ ராஜா படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
