மதகஜராஜா திரைப்படம் 9 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதகஜராஜா
கிடப்பில் இருக்கும் ஒரு திரைப்படம் 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்தாலும், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடையும் என எடுத்துக்காட்டாக மாறியுள்ளது மதகஜராஜா.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி, Sonu Sood ஆகியோர் நடித்திருந்தனர்.
விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. சமீபத்தில்தான் இந்த வெற்றியை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினார்கள்.
வசூல்
இந்த நிலையில் 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள விஷாலும் மதகஜராஜா திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video