வசூலை வாரிக்குவிக்கும் விஷாலின் மதகஜராஜா படம்.. இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா
மதகஜராஜா
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்திராத சாதனையை மதகஜராஜா படம் செய்துள்ளது.
ஒருசில திரைப்படங்கள் சில ஆண்டுகள் தாமகதமாக வெளிவந்தாலே, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிடும். ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்தும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது மதகஜராஜா திரைப்படம்.
விஷால் நடிப்பில் உருவான இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து வசூலில் சக்கப்போடும் போட்டு வருகிறது.
வசூல்
இந்த நிலையில் இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 54 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ரூ. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், தற்போது ரூ. 54 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் லாபத்தை கொடுத்துள்ளது.