மதகஜராஜா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதகஜராஜா
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அரண்மனை 4 அமைந்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டும் முதல் வெற்றியை சுந்தர் சி தான் கொடுக்கப்போகிறார் என பேசப்பட்டு வருகிறது.

13 வருடங்கள் கிடப்பில் இருந்த மதகஜராஜா திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. இயக்குநர் சுந்தர் சி - விஷால் - சந்தானம் கூட்டணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில மைனஸ் பாயிண்ட் படத்தில் இருந்தாலும் கூட, நகைச்சுவை வேற லெவல் என அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில், முதல் நாள் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் வசூலில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan