பல வருடங்கள் கழித்து வெளிவரும் மதகஜராஜா படம்.. டைட்டில் அர்த்தம் என்ன தெரியுமா
மதகஜராஜா
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தனம் இணைந்து நடித்து உருவான திரைப்படம் மதகஜராஜா. இப்படத்தில் அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் பாலிவுட் நடிகர் சோனு Sood வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டே இப்படம் வெளிவர தயாராக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

ஸ்பைடர் மேன் பட ஜோடி டாம் ஹாலண்ட் - ஜெண்டயா விரைவில் திருமணம்.. ரகசியமாக நடந்து முடிந்த நிச்சையாதார்தம்
பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சுந்தர்.சி, விஷால் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
டைட்டில் அர்த்தம்
மதகஜராஜா படத்தின் குறுகிய தலைப்பு எம்ஜிஆர் என்பதை நாம் அறிவோம். ஆனால், மத கஜ ராஜா என்கிற தலைப்புக்கு விரிவாக்கம் என்ன என்று தெரியுமா.
படத்தின் ஹீரோயின் அஞ்சலியின் கதாபாத்திர பெயர் 'மதனதேவி', மற்றொரு ஹீரோயின் வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் 'கஜராணி' மற்றும் ஹீரோ விஷாலின் கதாபாத்திர பெயர் 'ராஜா' . இவர்களுடைய கதாபாத்திர பெயர்கள் தான் படத்தின் தலைப்பாகும்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
