இரண்டாம் திருமணமா?.. முதன் முறையாக விளக்கம் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
இவர் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சமீபத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது காதலர் என்று கூறி அவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இது குறித்த செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வைரலானது. இது தொடர்பாக, அமைதி காத்து வந்த மாதம்பட்டி தற்போது முதன் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.
விளக்கம்
அதில், "என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வலம் வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். தற்போது, என் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பொது இடங்களில் பேச விரும்பவில்லை. அவ்வாறு நான் பேச வேண்டும் என்ற சூழல் வந்தால் நான் கண்டிப்பாக அதற்கு பதிலளிப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.